பெரியவர் படுத்த படுக்கையா கிடக்கிறார் ஆனா அவர் பெத்த பையன் இன்னும் வந்து பார்க்கல...
ஆமா அவர் பையன் எங்க இருக்கார்? ஊர் திருவிழாவிற்கு வந்த ஒருவர் கேட்டார்.
அவன் இங்கதான் சென்னைல இருக்கான். Flight ல வந்தா ஒரு மணி நேரத்துல வந்துடலாம்.
இவர் படுத்து ஒரு வருஷம் ஆகுது... பையன் ஆரம்பத்துல அடிக்கடி வந்து பாத்துட்டு தான் இருந்தான். இப்போதான் அவ்வளவா வர்றது இல்ல.
இவருக்கு கண்ணும் சரியா தெரியறது இல்ல, காதும் கேட்காது. பாவம் ஏதோ உயிர கையில புடிச்சுட்டு இருக்கார் யாருக்காகவோ...
ஆள் ஆளுக்கு இப்பிடியே பேசிட்டு இருந்தா எப்படி... இன்னும் கொஞ்ச நேரம் தான் தாங்கும்னு டாக்டர் சொல்லிட்டார்.
யாராச்சும் அவர் பையனுக்கு உடனடியா தகவல் சொல்லுங்க...
ஒரு மணிநேரம் கடந்தது...
கதவை திறந்து உள்ளே ஓடி வந்தேன் ...
அப்பா... சத்தமாக அழைத்தும் பதிலேதும் இல்லை.
தம்பி இந்தாங்க இந்த பால கொடுங்க... இன்னும் கொஞ்ச நேரம் தான் இருப்பார்னு டாக்டர் சொல்லிட்டார்...
நடுங்கிய கையோடு பாலை கொடுத்தேன் ...
ஒரு மென் சிரிப்பு எட்டி பார்த்தது... பின் அசைவேதும் இல்லாமல் நிம்மதியாக சென்றார்.
ஏப்பா இங்க தான் சென்னைல இருக்கியாமா கடைசி காலத்துல உங்க அப்பாவ உன் கூடயே வெச்சு பார்த்துக்க கூடாது... அந்த விருந்தினர் விசாரித்தார்
Sir , இது பக்கத்து வீட்டு பையன். இவன் தான் தாத்தாவை கடைசி காலத்துல பாத்துக்கிட்டது. அதான் பெருசு இவன் வந்ததும் நிம்மதியா போய் சேந்துருச்சு...
பெரியவரின் உறவுகள் அவர் மகன் வரவிற்க்காக காத்திருந்தனர்...
அநாதை ஆனேன் மறுபடியும்...
No comments:
Post a Comment