Pages

Wednesday, June 29, 2016

Stress - மன அழுத்தம்


காலையில் என்றைக்கும் இல்லாமல் அயர்ந்து உறங்கி விட்டேன் போலும். 9 மணியை காட்டியது கைபேசி.

அடடே ரொம்ப லேட் ஆயிடுச்சே...

அவசரமாக தயார் ஆகி கொண்டிருந்தேன் . 30 நிமிடங்களில் தயார் ஆனேன்.

வெளியே என் மனைவியின் குரல் கேட்டது...

அப்பிடி என்ன இன்னைக்கு இப்படி தூங்கறார், எவ்ளோ எழுப்பினாலும் எந்திரிக்காம ... பொண்ண ஸ்கூல்க்கு அனுப்பனும் breakfast ரெடி பண்ணனும் lunch pack பண்ணனும் ... இதெல்லாம் எதும் கண்டுக்காம இவர் இஷ்டத்துக்கு நல்ல தூங்கறார் ... எதுனா வந்து உதவி பண்ணலாம்ல ... ஆஃபீஸ்  வேலை மட்டும் மணிக்கணக்கா பண்ணிட்டு வீட்டை மறந்துடுவார்...

பாவம் இன்னைக்கு ஈவினிங் சீக்கிரமா வந்து அவள வெளிய கூட்டி போகணும்... மனதுக்குள் நினைத்து கொண்டேன்..

அவசரமாக கிளம்ப வேண்டி இருந்ததால் breakfast வேண்டாம்னு சொல்லிட்டு கிளம்பினேன்... நான் சொன்னது என் மனைவிக்கு கேட்க வில்லைனு தெரிந்தது...அவள் இப்பொழுதும் நான் தூங்கி கொண்டு இருப்பதாக நினைத்து ஏதோ பேசிக்கொண்டு இருந்தால்...

என் bike எடுத்து கிளம்பினேன்... ஏற்கனவே late ஆனதால் வேகமாக செல்ல வேண்டி இருந்தது...


எங்கடா அவனை இன்னும் காணோம் .. இன்னைக்கு presentation இருக்கு... டாப் மேனேஜ்மென்ட் எல்லோரும் வர்ராங்க...
இன்னும் இவனை காணோம்... எனது மானேஜர் என் நண்பனிடம் விசாரித்து கொண்டிருந்தார்.

sir , நான் அப்போவே சொன்னேன் நீங்க தான் நல்ல talented guy அது இது னு சொன்னீங்க. இப்போ பாருங்க சரியான நேரத்துக்கு வராம இப்படி பன்றான், எனது நண்பனின் பதில் இதுவாக இருக்கும் என எதிர் பார்க்கவில்லை.

கடந்த 3 மாதமா இந்த ப்ரொஜெக்ட்க்காக சரியா தூங்காம இரவு பகல் பார்க்காம உழைத்தவன்... இருக்கறதுலயே அவன் தான் திறமை சாலி ... அதில் எந்த சந்தேகமும் இல்லை... அவன் இப்போ சரியான நேரத்துக்கு வந்தா  போதும், மத்ததெல்லாம் அவனே பார்த்துப்பான்... எனக்காக என் மேனஜர் நல்ல விதமாக பேசியது மனதிற்கு இதமாக இருந்தாலும் என் நண்பன் என நினைத்த இவன் என்ன இப்டி குறை கூறுகிறானே... சரி நம் வேலையை பார்ப்போம்.

மேனஜர் முன்னால் போய் நின்றேன் ஆனால் வேறு ஏதோ நினைத்து கொண்டு இருக்கிறார் என்று நினைக்கிறேன் என்னை கண்டுகொள்ளவில்லை. Sir என்றேன்... பதில் ஏதும் இல்லை...
அவரது தோலை தொட்டு அழைத்தேன்...ஆனால்...

என்னால் இதை நம்ப முடியவில்லை... என்னால் அவரை தொட முடியவில்லை...

நான் முடிந்த அளவு கத்தி பார்த்தேன்... நான் பேசுவது யாருக்கும் கேட்க வில்லை...

பாத்ரூம் சென்று கண்ணாடியில் என்னை பார்க்க முயன்றேன்... ஐயோ என் முகம் தெரியவில்லை. எனக்கு என்னாயிற்று... ஏன் என்னால் என்னை பார்க்க முடியவில்லை... என் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை...

நான் திரும்பி மானேஜர் இருக்கும் இடத்திற்கு வந்தேன்...

சரிப்பா...அவன் வர்ற மாதிரி தெரியல... அந்த ப்ரெசென்ட்டேஷன் காப்பி என்கிட்ட இருக்கு...இனிமே நீயே இதைcontinue பண்ணு...

ஐயோ என் உழைப்பல்லவா அது...  இவ்வளவு தானா? இதற்காகவா நான் இத்தனை நாளும் உழைத்தேன்... Top Talent அது இது னு சொன்னாங்களே...வீடு wife daughter எல்லோரையும் விட்டு முழுநேரமும் office ல இருந்தேனே...

சரி வீட்டுக்கு சென்று பார்க்கலாம் என பார்க்கிங் கிற்கு வந்தேன்... என் bike  அங்கு இல்லை...

வீட்டுக்கு சென்று பார்த்தேன்...

கதவு சாத்தியிருந்தது.

உள்ளே என் மனைவி குரல் கேட்டது...

கதவை திறக்காமலே என்னால் உள்ளே செல்ல முடிந்தது...

நான் அணிந்து கொண்டு இருக்கும் ஆடை hanger இல் தொங்கி கொண்டிருந்தது...

நானே கட்டிலில் உறங்கி கொண்டு இருந்தேன்...

என் மனைவி ஒரு doctor உடன் பேசிக்கொண்டு இருந்தாள்.

என்ன டாக்டர் ஆச்சு என் கணவருக்கு...night கூட நல்ல இருந்தாரே...

silent stroke ... ... இறந்து 6 மணி நேரம் ஆயிடுச்சு...

stress தான் ஒரே காரணமாக இருக்க முடியும் இந்த வயசுல வரணும்னா... என்ன வேலை செய்றார்?

என் மனைவியின் அழு குரல்... அவளுக்கு ஆறுதல் சொல்ல கூட யாரும் இல்லாமல் ...

No comments:

Missing Mom: Scary days

One day Arya told me that he is scared. I asked " Why Arya? Did you see any horror movie? " " No pa, Amma is not here with me...